முழுகாப்புரிமை - பாலு சரவண சர்மா -ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
சந்திர உதயம் அஸ்தம் கணிதம்:
சந்திர உதய அஸ்தமனமானது பஞ்சாங்க கணிதத்தில் மிகமுக்கியமானதாகும். உதயாஸ்தமன வியாபித அடிப்படையில்தான் சந்திர தரிசனம், சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி பூஜை, அன்னாபிஷேகம் இன்னும் பல பண்டிகைகள் தீர்மானிக்கப்படுகிறது
சந்திர உதயத்தை கணிக்க அடிப்படையானது சந்திரனின் சூரிய இணைவு இடைவெளி (synodic Period)காலமாகும். இதை சந்திரமாதம் என்றும் கூறலாம் (சந்திரனின் செயல்பாட்டில் பலவித மாதங்கள் உள்ளது அதில் இதுவும் ஒன்றாகும்)
சூத்திரம்:
சராசரி உதய காலம் : இணைவுகாலத்தை ஒருநாள் பூமி சுற்றும் 360 பாகைக்கு சரியான அளவான 24 கடிகார மணியால் வகுக்க வரும் தொகை சராசரி உதய அல்லது அஸ்தமன கால வேறுபாடாகும்.

அதன்படி மேலே படத்தில் உள்ள சூத்திரப்படி கணித்தால் 2016ம் ஆண்டிற்கு 48நிமிடம் 45.78விநாடி வருகிறது. இதுவே சராசரி அளவாகும்
பூமத்திரேகையில் சமநாளில் பவுர்ணமி அன்று சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் நிலையில் சூரியனுக்கு எதிர்நிலையில் 180°யில் சந்திரன் இருக்க அடுத்தநாள் 48 நிமிடம் கழித்து சந்திரன் உதயமாகும்
அதுபோல் முன்னாளைவிட மறுநாள் சராசரியாக 48 நிமிடங்கள் கழித்து சந்திரன் அஸ்தமனமாகும்.
சூரிய ஸ்புடத்தையும் சந்திரஸ்புடத்தையும் கணித்து அதில் longitudeல் சூரிய சந்திர இணைவு பாகை 0° என கொண்டு அதுமுதல் மறு சூரிய சந்திர 0° பாகை இணைவு வரை உள்ள இடைவெளி காலமே “இணைவுகாலம்”( synodic Period)
இந்த synodic Period கால அளவானது பலசூழலில் மாறுபடும். இதை கணிக்க சர்வதேச வானியல் சம்மேளன நிலைப்பு (Astronomical Constants )மூல அளவுகொண்டு கணிக்க வேண்டும். (குறிப்பு இந்த நிலைப்புகள் மாறுதலுக்குட்பட்டவையே)
பொதுவாக சந்திர உதயாஸ்தமன கால வேறுபாட்டிற்கான காரணிகள்
1. சூரியனுக்கு அருகில் பூமி சஞ்சரிக்க சந்திரனின் பூமிக்கு அருகில் சஞ்சரிக்க “மிகஅதிக வேறுபாடு” இருக்கும்
2. சூரியனுக்கு அருகில் பூமி சஞ்சரிக்க சந்திரனின் பூமிக்கு தொலைவில் சஞ்சரிக்க “அதிக வேறுபாடு” இருக்கும்
3. சூரியனுக்கு தொலைவில் பூமி சஞ்சரிக்க சந்திரனின் பூமிக்கு அருகில் சஞ்சரிக்க “குறைவான வேறுபாடு” இருக்கும்
4. சூரியனுக்கு தொலைவில் பூமி சஞ்சரிக்க சந்திரனின் பூமிக்கு தொலைவில் சஞ்சரிக்க “மிககுறைவான வேறுபாடு” இருக்கும்.
5 மற்ற கிரகங்களின் செயல்பாடும். சந்தினின் உட்புறம் ஏற்படும் மாற்றங்களும் சந்திரனின் புவிசுற்று வேகத்தில் தாக்கம் ஏற்படுத்தும்.
சந்திரனின் சுற்று வேகம் (orbital velocity)விநாடிக்கு
அதிகபட்ச வேகம் 1.076 (கி.மி/வி)
குறைந்தபட்ச வேகம் 0.964 (கி.மி/வி)
சராசரி வேகம் 1.022 (கி.மி/வி)
சந்திரனின் சுற்று வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் திதி, நட்சத்திர கால அளவுகளும் மாறுதல் அடையும்.
திதியின் (12பாகை) கால அளவு
குறைந்த பட்சம் : 19 மணி 59 நிமிடம் (49 நாழிகை 57 விநாழிகை 30 தர்பரை)
அதிக பட்சம்: 26 மணி 47 நிமிடம் ( 66 நாழிகை 57 விநாழிகை 30 தர்பரை)
திதியின் சராசரி கால அளவு 23 மணி 37 நிமிடம் 28.096 விநாடி (59 நாழிகை 3 விநா 40 தர்பரை)
நட்சத்திரத்தின் (13 பா 20 கலை) சராசரி கால அளவு: 24 மணி 17 நிமிடம் 9.317 விநாடி
நிலவின் பலவேறு கால அளவுகள்
சந்திர கால நிலைகள் |
கால அளவு (இவைகள் சராசரி அளவாகும்) |
சூரிய இணைவு காலம்
synodic Period |
29.530587981 நாள் (29 நா 12 மணி 44 நிமி 2.9 விநா) |
அன்மை நிலை இடைவெளி காலம்
Perigee to Perigee |
27.55454988 நாள்( 27 நா 13 மணி 18 நிமி 33.1 விநா) |
நட்சத்திர பின்னணி இணைவு காலம்
Sidereal Time - Fixed Star to fixed Star |
27.321662 நாள் (27 நாள் 7 மணி 43 நிமி 11.6 விநா) |
மேல் வெட்டுப்புள்ளி சந்திப்பு காலம்
Node to Node |
27.212220817 (27 நாள் 5மணி 5 நிமி 35.9 விநா) |
சமநாள் நிலைகாலம்
Equinox to Equinox |
27.321582 (27 நாள் 7 மணி 43 நிமி 4.7 விநா) |
சந்திர உதயமும் விரத நிர்ணயமும்
சங்கடஹர சதுர்த்தி:
சங்கடஹர சதுர்த்தி அன்று சந்திர உதயம் பொதுவாக இரவு 9:12 ஆகும் அந்த நேரத்தில் சதுர்த்தி திதி இருக்க வேண்டும்
அன்னாபிஷேகம்:
சாயரட்சையில் தீபாரதனை காலத்தில் பவுர்ணமி இருக்க வேண்டும். சந்திரன் உதயத்தில் இருக்க வேண்டும்.
சந்திர சரிசனம்:
அமாவாசை அடுத்த 2ம்நாள் சுக்ல துவதியை திதி சந்திர உதய காலமான இரவு 7:32க்கு இருக்க வேண்டும்
கிருஷ்ண ஜயந்தி:
நள்ளிரவில் அஷ்டமி இருக்க, ரோகினி நட்சத்திரம், சந்திர உதயமாகி, ரிஷப லக்னம், இரவு உச்சி, ஹர்ஷண யாகம், இருக்கும் காலம்
கிருஷ்ண ஜயந்தி
முழுகாப்புரிமை - ஸ்ரீதணிகைபஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதம்
தொலைபேசி எண்: 98403 69677 மின்னஞ்சல்: prohithar@gmai.com
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்
www.prohithar.com | www.thanigaipanchangam.com |