Tambaram Astrologer

எத்தனை குரு பெயர்ச்சிகள்......!

tambaram astrologer, prohithar, sri thanigai panchangam, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்.

அயனாம்ஸம் நீக்கி (சாயனம்), அயனாம்ஸம் சேர்த்து நிராயணம், இதன் உட்பிரிவான வாக்கியம், திருக்கணிதம், சூரிய சித்தாந்தம், இவைகளின் உட்பிரிவுகள் சுமார் 20க்கும் மேல் இப்படி 3 டஜன் குரு பெயர்ச்சிகள் இதை எல்லாம் கொண்டாட கோவில்கள் துவக்கினால்....!

சித்தாந்தங்களில் குரு தினமும் பெயர்ச்சி அடைகிறார். இந்திய இராசி மண்டலங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அபஜித் நட்சத்திரம் நீக்கம் ...இன்னும் பல திருத்தங்களை நமது வானவியல் அறிஞர்கள் செய்துள்ளனர்....

நமது பண்பாட்டில் தர்மமே பிரதானமாக கொண்டு வழிபாடு செய்யப்பட்டது அன்றி பொருள் முதலாக (materialism) கொண்டு அல்ல.

எந்த ஒரு வழிபாடும் தர்மத்திற்கு விரோதமாக வருவாய் மட்டும் கருத்தில் கொண்டு முன்னிலைப் படுத்தபடுமாயின் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

வழிபாடு கீண்கண்ட வகையில் இருத்தல் வேண்டும்
உங்கள் வாயால் இறைவனை துதித்தல்
உங்களை கைகளால் இறைவனை தினமும் வணங்கி தானம் செய்தல்
உங்கள் கண்களால் இறைவனின் முகத்தை தீபத்தால் காணுதல்
உங்கள் காதுகளால் இறைவனின் திருநாமம் அல்லது அர்ச்சனையை கேட்டல்
உங்கள் மனதால் எப்பொழுதும் தர்மத்தை சிந்தித்தல்
இதுவே இந்து மதத்தில் ஆணிவேர்
குரு பெயர்ச்சிக்கு நீங்கள் என்ன தானம் செய்தீர்கள் ? பலன் அடைந்தவர்கள் யார்?

உடை(மானம் காத்தல்), உணவு(பசியாற்றல்), நல்உறக்கம் (உறங்க போர்வை , தலையணை தருதல்),
அறிவுக்கு நல் புத்தகங்களை தானம் செய்தல்

தர்மம் இல்லாத வழிபாடு பலன் தராது என்கிறது உபநிஷதம்.
10.7.2015


மறைக்கப்பட்ட இந்தியாவின் பெருமைகள்

tambaram astrologer, prohithar, sri thanigai panchangam, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்.
பண்டைய பாரதத்தின் அறிவியல் சாதனைகள்
http://www.prohithar.com/downloads/GREAT_INDIANS.pdf

தொன்ம இந்திய வானவியல்
http://www.prohithar.com/downloads/astronomy_in_india.pdf

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாரத பூமியில் 
பிறந்திட வேண்டுவனே.....!
9.7.2015


ஏன் இந்த வெயில் இப்படி அடிக்கிறது...!

tambaram astrologer, prohithar, sri thanigai panchangam, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்.

சென்னையில் 25.4.2015 அன்று உச்சிக்கு வந்த சூரியன் வடக்கில் பயணம் செய்து 21.6.2015 அன்று தெற்கு நோக்கி வருகிறார் 18.8.2015 அன்று சென்னைக்கு உச்சிக்கு வரும் அவர் பின்னர் தென்தமிழகத்திற்கு உச்சிக்கு வருவார் இக்காலம் வரை வெயில் தாக்கம் இருக்கும்.

கடல்(ஆடி)காற்றால் வெயில் தாக்கம் குறையலாம். ஆயினும் சிலநாட்களில் அக்னிநட்சத்திரகாலம் போன்று வெயில் 110 பாகையை தாண்டும்.

இது ஒரு வழக்கமான ஒன்று. எண்ணிலடங்கா வாகன புகை, இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் மரத்தையும் சண்டை போட்டு வெட்டி, தார்சாலைகளை சிமிண்டு சாலைகளாக மாற்றியதால் சென்னையில் வெப்பம் அதிகரித்துள்ளது.

அடிக்கடி உப்பு, சர்க்கரை கலந்த நீரை பருகுவது நன்று. எக்காரணம் கொண்டும் கோகோ கோலா, பேண்டா போன்றவற்றை பருக வேண்டாம், மாறாக பழச்சாறு, இளநீர் நன்று

வாழ்க வளமுடன்
Tambaram Astrolgoer Balu Saravanan 9.7.2015 www.prohithar.com


ஈசான்யமும் வடகிழக்கு திசையும் ஒன்றல் இரண்டும் வேறுபட்டவை

tambaram astrologer, prohithar, sri thanigai panchangam, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்.

ஈசான்யம் என்பது சூரியனின் கதிர்வீச்சின் அதிகபட்ச உத்திர திசையாகும். பூமத்திரேகையில் இது 23.5 பாகை கொண்டது. அட்சரேகை அடிப்படையில் இடத்திற்கு இடம் மாறும்.

வாஸ்துப்படி கட்டப்படும் கட்டிடங்கள் நீண்ட சதுரமாக சில இடங்களில் அமையும்...!

வடகிழக்கு என்பது வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய திசையில் சீரான 45 பாகை அளவாகும். இது நிலையானதாகும். வானவியலில் இது மாறுதலுக்குட்பட்டவையல்ல. அதுபோல் ஈசான்யம் ஒரு இடத்தில் சூரீயன் அதிகபட்ச வடநிலையை குறிப்பதாகும்.


சந்திரனுக்கு கிரக அஸ்தங்க தோஷம் உண்டா? கிரக அஸ்தங்கம் என்றால் என்ன?


tambaram astrologer, prohithar, sri thanigai panchangam, தாம்பரம் ஜோதிடர், புரோகிதர், ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்.
புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.

கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)

சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது 
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.

புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.

கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்

கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)

சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது, 
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)

சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும். 
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது

கிரக கடவு (Transit)அஸ்தங்கமா? 
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்

அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும். 
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும். 
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.

வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்

பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன். 
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)

பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer


நிஜமான வாஸ்து பூஜை நாட்கள்
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg

குறிப்பு: வாஸ்து சாஸ்திரம் சூரியனின் நிஜமான அயன அடிப்படையிலானது. சூரியன் ஓளி, நிழல் விழும் திசை மற்றும் கோணத்தில் அடிப்படையில் தான் சங்குஸ்தாபனம்செய்யப்பட்டு கட்டிட பணிகள் துவக்க வேண்டும் என்பது மூலவாஸ்து நூல்களில் மிக தெளிவாககுறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாஸ்து பூஜை சூரியனின் அயன அடிப்படையில் தான் செய்யவேண்டும்.

பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer

Balu Saravanan Sharma -Tambaram Astrologer - Sri Thanigai Panchnangam
9. 4th Strre, Kalyana Nagar, West Tambaram, Chennai, Pincode: 600045,
Cell: 9840369677 (Contact Time 1 pm - 8 pm) Donot Contact me before 1pm