vakya panchagnam mistake

எதிர்வரும் 28.8.2016 (துன்முகி வருடம், ஆவணி 12) ஞாயிறு அன்று அதிகாலையில் வானவியல் மற்றும் திருக்கணிதப்படி சுக்கிரனுக்கு மிக அருகில் குரு நெருங்கி வானில் காட்சி யளிக்கும் நிகழ்வை உலகம் முழுவதும் மக்கள் காணும் அதேவேளையில் பாரம்பரியமான வரருசி வாக்கிய பஞ்சாங்க கணிதமுறைகள்படி இந்த அறிவியல் நிகழ்வு நடைபெறாது என்று "பிழையாக" தெரியவருகிறது.

அறிவியல் மற்றும் திருக்கணிதப்படி தமிழகத்தில் 27.8.2016 சனிக்கிழமை மாலை குருவும் சுக்கிரனும் இரவு 7:39 மணி அளவில் மேற்கு திசையில் அஸ்தமனம் ஆகும் முன்னர் சுமார் 7 மணி அளவில் இரண்டு கிரகங்களுக்கும் இடையில் 1 பாகைக்கும் குறைவாக 0° 23’ 19.74” பாகை கோண அளவு இடைவெளி இருக்கும்....!

உச்சகட்டமாக ஆங்கிலப்படி 28 அன்று அதிகாலை 4 மணி அளவில் 0° 3’ 59” பாகை அளவில் மிகமிக நெருக்கமாக குருவும் சுக்கிரனும் வானத்தில் காட்சியளிக்கும். (இந்த நிகழ்வை குரு-சுக்கிர அஸ்தமனமாகும் கிழக்கு கனடா கடற்கரை நகரங்கள், கீரீன்லாந்து நாடுகிளில் கண்டு இரசிக்கலாம்

இது போன்ற அறிய நிகழ்வு மீண்டும் 49 ஆண்டுகள் கழித்து 22.11.2065 அன்று காணலாம்..!.

கண்ணுக்கு தெரியும் இதுபோன்று வானியில் நிகழ்வை "நிகழாது" எனக்கூறும் பிழையான வாக்கிய பஞ்சாங்க கணிதங்களை திருத்தம் செய்து காலத்திற்கேற்ப திருக்கணிதம் போல் செம்மைப்படுத்தி வெளியிட கணித ஆர்வலர்கள் முன்வந்தால் மட்டுமே நமது தேசத்தின் பண்டைய கணித ஆற்றல்கள் உலகம் முழுவதும் போற்றப்படும்.

வாக்கியம் சரி என்று கூறுபவர்கள் இதுபோன்ற வானியல் நிகழ்வுகளை ஒப்பிட்டு திருக்கணிதம் முறை அறிவியலுடன் ஓத்துப்போகும் பொழுது "வாக்கியம்" மட்டும் ஏன் நிஜத்திலிருந்து விலகி உள்ளது என்பதை ஆய்வு செய்து கணிதமேம்பாட்டிற்கு உதவிசெய்தும், சரியான நாட்களில் பண்டிகைகள், சிரார்தங்கள் கடைபிடிக்க முன்வரவேண்டும்.

குறைசொல்வது எளிது, சரிபடுத்த முன்வாருங்கள். ஒன்றிணைந்து இந்திய பாரம்பரிய வானவியல் கணிதமுறைகளை மேம்படுத்துவோம்.

vakya panchagnam mistake

இப்படி வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள பிழையை மிக தெளிவாக கண்டும் இன்னும் வாக்கியபஞ்சாங்கமே சரிஎன்று வாதிடுபவர்கள் இனியாவது அறிவியல் முறையான திருக்கணித முறை மறுத்துப்பேசுவதை நிறுத்தி "வாக்கிய" முறையை சீர்படுத்த முன்வாருங்கள்.

வானவியல் கூற்றுப்படி 0.07 பாகை நெருக்கத்தில் குருவும் சுக்கிரனும் இருக்கும் அதே வேளையில் வாக்கியப்பஞ்சாங்கத்தில் குருவும் சுக்கிரனும் சுமார் 57 மடங்கு தொலைவில் அதாகில் 4 பாகை தொலைவில் இருப்பது கண்ணுக்கு தெரியும் கணிதப்பிழை

 

குரு சுக்கிர யுத்தம், சேர்கை, நெருக்கம், வியாழன் கோள் அருகில் வெள்ளி Jupiter Venus Conjunction Calculation maths Formula

குரு சுக்கிர யுத்தம், சேர்கை, நெருக்கம், வியாழன் கோள் அருகில் வெள்ளி Jupiter Venus Conjunction Calculation maths Formula

முழுகாப்புரிமை - ஸ்ரீதணிகைபஞ்சாங்கம்
பாலு சரவண சர்மா
பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதம், தொலைபேசி எண்: 98403 69677 மின்னஞ்சல்: prohithar@gmail.com
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

Jupiter Venus Conjunction Chennai, India, Nasa, ISRO, IAU, Tambaram Astronomy Club, 27, 28 Augest 2016, 2016, Thiruthanigai Panchangam, Vakya Panchangam, Eclipse, Maths, Calculation, Planetry Position, IAS, Birla Planetarium, பிர்லா பிளானட்டோரியம், தாம்பரம் வானியல் கழகம், சென்னை, 45, இந்தியா, வானியல் துறை, நேரடி ஒளிபரப்பு, அறிவியலாளர்கள், விஞ்ஞானி, தொலைநோக்கி, ஜோதிடர், Astrologer, Prohithar, Panchangam, Almanac

www.prohithar.com | www.thanigaipanchangam.com

காப்பிரைட் எச்சரிக்கை